2021ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவர் – உலக வங்கி எச்சரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,037,992-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,143,863 -பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 514-பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 862-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுநோயால் 2021ம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் மூலதனம், உழைப்பு, திறன்களை பின்பற்றுவதன் மூலம் உலக நாடுகள் க் க்குப் பிந்தைய “வேறுபட்ட பொருளாதாரத்திற்கு” தயாராக வேண்டும் என்றும் உலக வங்கி எச்சரித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.