Wild Elephant Attack: சிக்கமகளூர் மாவட்டம் என் ஆர் புரா தாலுகா பாலேஹோன்னூர் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாவணகெரெ மாவட்டம் ஒன்னல்லி தாலுகாவை சேர்ந்த ஹாலேஸ் அவரது மனைவி அனிதா 25 வயது இருவரும் வெளியூருக்கு சென்று விட்டு வந்து ஆட்டோவில் இறங்கி காப்பி தோட்ட குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொழுது யானை தாக்கியதில் அனிதா இறந்துவிட்டார் ஹாலேஸிற்க்கு காயம் ஏற்பட்டது
அப்பொழுது பாலேஹோன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய நிலையில் நேற்று இரவு சிக்கமகளூர் மாவட்டம் என் ஆர் புரா தாலுகா காண்டியா அண்டுவாணியை சேர்ந்த சுப்பராயகவுடா 65 வயது இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது திடீரென வந்த காட்டு யானை அவரை தாக்கி தூக்கி வீசி போட்டதில் சம்பவ இடத்திலேயே நேற்று இரவு 9 மணிக்கு இறந்து விட்டார்
நான்கு நாட்களில் இரண்டு பேர் இறந்த நிலையில் வனத்துறையினர் மீது ஆக்ரோஷம் கொண்ட கிராமத்தினர் பாலேஹோன்னூர் வனத்துறை அலுவலகம் முன்பு பிரம்மாண்டமான பெரிய அளவில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கடைகளை முழு அடைப்பு உடனடியாக காட்டு யானைகளை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் எனவும் அடிக்கடி உயிரைக் கொல்லும் காட்டு யானைகளை வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் எனவும் பிடித்துச் செல்ல வேண்டும் எனவும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால்
அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அனுமதி பெற்று குடகு மாவட்டத்தில் இருந்து கும்கி யானைகளை இன்றே வரவழைத்து காட்டு யானையை பிடிப்பதாக உறுதி அளித்தனர் இதேவேளையில் இன்று குல்பர்கா மாவட்டத்தில் இருந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கான்றே கடிதம் மூலம் இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கி குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் விரைவில் யானையை பிடிப்பதாகவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதாகவும் இனி இதுபோன்று நடக்காமல் நடவடிக்கை எடுப்பதாக அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்
நிரந்தரமாக யானை அட்டகாசம் செய்து வரும் பட்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த காப்பி தோட்டத்திற்கு வேலை செல்வதற்கு பயந்து போய் உள்ளனர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது



