Chikkamagaluru: சிக்கமகளூருக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்த லொக்கயுக்தா துணை நீதிபதி பர்னேந்திரா சிக்கமகளூரில் உள்ள பல்வேறு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனை சாலைகள் அரசு பஸ் நிலையம் சிக்கமகளூரில் உள்ள இந்தாவரா குப்பை கிடங்கு அனைத்தையும் சென்று பார்வையிட்டார் அங்கு அவர் வந்தவுடன் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சென்று அவரிடம் இது போன்று பல குறைகளையும் தரமற்றிருப்பதாகவும் தெரிவித்தனர்
அவரிடம் பலரும் குறைகளை கூறினார்கள் பஸ் நிலையத்தில் இருக்கும் ஹோட்டல் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த இடங்கள் அசுத்தமாக இருப்பதாகவும் மற்றும் குப்பை கிடங்கு போடும் இடத்தில் போய் தரம் பிரிப்பது பாதிப்பு ஏற்படுகின்றதா என்பது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார் பின்னர் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி குவெம்பு கலையரங்கத்தில் நடந்தது இந்த கலையரங்கத்தில் நடந்த மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து அவர் பேசுகையில்

அரசியல் சட்ட அமைப்பு மக்களுக்கு விரும்பியவாறு நம்பிக்கையோடு கொண்டு சென்று செலுத்த வேண்டும் நியாயமான வாழ்க்கை கிடைப்பதற்கு அரசு பொதுமக்களுக்காக பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றன அரசியல் சலுகைகள் கிடைப்பது மற்றும் சலுகைகளை பெறுவது அதை உறுதி செய்வது மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும் அரசின் சலுகைகளை அனைத்து பொதுமக்களுக்கும் எடுத்துச் சென்று மற்றும் அரசுக்குரிய சட்ட திட்டங்கள் படி அதை சரியாக அதிகாரிகள் வழிநடத்திச் செல்ல வேண்டும் அரசுக்கு நீதித்துறை மற்றும் லோக்காயுக்தா பல்வேறு சலுகைகளை கூறி குறைபாடுகளை நீக்கி வருவதாகவும் மேலும் நான்காவது அங்கமான பத்திரிகை துறையினர் அரசு நடத்தும் அனைத்து விதமான திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்வது உறுதியாக செயல்பட்டு வருவதாகவும்
மாநிலத்தில் திறம்பட செயல்பட்டு குற்றம் புரிபவர்களை தண்டித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் அதேபோல அங்கு பலரிடம் குறைகள் குறித்து மனுவை வாங்கினார் வாங்கியதை அதை இடத்திலேயே அதற்கு விளக்கமும் கேட்டு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது அவருடன் மாவட்ட கலெக்டர் மீனா நகராஜ் மாவட்ட எஸ்பி விக்ரம் அமட்டே மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி கீர்த்தனா நகரசபை தலைவர் ஷீலா கமிஷனர் பசவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்



