Chikkamagaluru: ஊருக்குள் சுற்றி திரிந்த சிறுத்தை இரண்டு பேரைக் கடித்து குதறியது ஒருவர் கைவிரல் துண்டானது

Chikkamagaluru Leopard roaming in the village bit two people
Image credit to original source

Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா சக்ராயபட்னா அருகே உள்ள எம்மேதோட்டி  என்னும் கிராமத்தில் மதுகதே குளம் உள்ளது இந்தப் பகுதிகளில் இன்று காலை நடந்து சென்ற அதே ஊரைச் சேர்ந்த முத்தண்ணா 60 வயது மஞ்சன்னா நாற்பத்தைந்து வயது இருவரும் நடந்து சென்ற பொழுது திடிரென மதுகதே குளத்து கரையோரம் வந்த சிறுத்தை ஒன்று இருவர் மீதும் பாய்ந்தது

அதில் மஞ்சன்னா தப்பி ஓடி விட்டார் சிறிய காயங்களுடன் முத்தண்ணா என்பவரை கடித்த சிறுத்தை வலது கையின் விரலை கடித்து குதறியது இந்த நிலையில் அதே வேளையில் ஊர்காரர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடியதை அடுத்து அனைவர் மீதும் சிறுத்தை பாய தொடங்கியது

அதே வேளையில் ஊர்காரர்கள் கல்லை தூக்கி வீசி அடித்து சிறுத்தையை ஓட்டி விட்டனர் இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தெரிவித்தனர் கைவிரல் துண்டான முத்தண்ணாவையும் மஞ்சன்னா இருவரையும் சிக்கமகளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாடியதை பார்வையிட்டனர் பின்னர் அனுமதி பெற்று சிறுத்தையை பிடிப்பதாக உறுதி அளித்தனர்

Chikkamagaluru: Leopard roaming in the village bit two people