YouTube new CEO: யூடியூப் புதிய சிஇஓ.,வாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்

Indian-origin Neil Mohan has been appointed as the new CEO of YouTube. யூடியூப் நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சார்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். சூசன் வோஜ்சிக்கி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று பதவி விலகினார்.

இந்த நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூகுளள் நிறுவனத்தில் தொடக்க காலத்தில் ஊழியராக பணிபுரிந்தவர். இதனைத்தொடர்ந்து ஆல்பாபெட் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். யூடியூப்-ன் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன், புதிய தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானாக திகழும் நீல் மோகன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பட்டத்தை பெற்றுள்ளார்.

மார்ச் 2008 முதல் நவம்பர் 2015 வரை கூகுளில் காட்சி மற்றும் வீடியோ விளம்பரங்களின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கு முன், இணைய விளம்பரச் சேவையான டபுள் கிளிக்கில் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்தார்.

கடந்த 2013-ல் மோகனுக்கு ட்விட்டர் நிறுவனம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மோகனை ட்விட்டரில் சேரவிடாமல் தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் 100 மில்லியன் டாலர்களை, அதாவது இந்திய மதிப்பில் ரூ.827 கோடி அவருக்கு வழங்கியுள்ளது.