TNK Party: தமிழக நீதிக்கட்சி மாநில தலைவர் ஜெகன் பிறந்தநாள் கட்சித் தொண்டர்கள் வாழ்த்து

TNK State President Jagan's birthday wishes from party workers
Image credit / News next Tamil

TNK Party: தமிழ்நாட்டில்  சட்டமன்ற  தேர்தலில் பத்து தொகுதியில்  வெற்றி பெறுவோம் என டி என் கே கட்சி மாநிலத் தலைவர் ஜெகன் அவரது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசினார்

கரூர் டவுன் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் டி என் கே கட்சியின் மாநில தலைவர் ஜெகன் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த விழாவிற்கு வந்திருந்த கட்சி மாநில செயலாளர் பாஸ்கர் மாவட்டத் தலைவர்கள் நகரத் தலைவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு பாராட்டு விழா செய்து பின்னர் தனியார் ஓட்டலில்  கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர்

இந்த நிகழ்ச்சியில் டி என் கே கட்சியின் மாநில தலைவர் ஜெகன் பேசுகையில் கட்சி தொடங்கி இரண்டு மாதங்களே ஆன நிலையில் மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் மாநிலத்தில் பல தொகுதிகளில் மற்றகட்சிகள் வெற்றி பெறுவது குறித்து நமது கட்சி தான் முடிவெடுக்கும் எனவும் பத்துத் தொகுதிகளில்  கட்சி வெற்றி பெறும் என தெரிவித்தார்

மேலும் இந்த கட்சி அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய கட்சியாகும் எனவும் குரல் இல்லாத மக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாகும் எனவும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினராக சமுதாயத்தைச் சேர்ந்த மதி கவுண்டர் மற்றும் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் மாநிலத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவனண் வர முடியாமல் போனதால் அலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்