Home national Bjp Alliance Lead: திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது!

Bjp Alliance Lead: திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது!

Bjp Alliance Lead: திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது!

திரிபுரா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களாக கருதப்படும் (Bjp Alliance Lead) திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.

மேலும் நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக பின்தங்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த என்.பி.பி கட்சி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.