Cm Shivraj Singh Launches Rs 1000: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: மத்திய பிரதேச முதலமைச்சர் தொடங்கினார்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் (Cm Shivraj Singh Launches Rs 1000) தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு ‘முதலமைச்சர் லத்லி பெஹ்னா யோஜ்னா’ என்ற பெயரிட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் 65வது பிறந்தநாள் நேற்று (மார்ச் 5) கொண்டாடப்பட் நிலையில், பிரம்மாண்ட பொதுக்கூட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு திரண்டிருந்த பெண் பயனாளர்கள் மத்தியில் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.