
டெல்லி: மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை (Meghalaya Cm Meet Governor) தேர்தலில் என்.பி.பி. கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்டது. அதன்படி இந்தத் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின.
பதிவான வாக்குகள் நேற்று காலை (மார்ச் 2) 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவந்தது. அங்கு 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றதால் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு 30 இடங்கள் தேவை. ஆனால் அங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போன்று எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தது.
தற்போதைய ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டு இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், மேகாலயாவில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை இருப்பதாக அக்கட்சியின் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதலமைச்சருமான கான்ராட் சங்மா கூறினார். இதனையடுத்து தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா இன்று உரிமை கோரினார்.