Kadoor: கடூரில் பூட்டிய வீட்டில் நகை திருடிய ஒருவன் கைது 17 லட்சத்து 50 ஆயிரம் நகை மீட்பு

Man was arrested in Kadoor for stealing jewellery from a locked house
Image credit to original source

Kadoor: சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா லட்சுமேஸ்ரா நகரசேர்ந்த சோமு என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அனைவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த பொழுது 195 கிராம் தங்க நகை 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அப்பொழுது பூட்டிய வீட்டில்   பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்

அது சம்பந்தமாக கடூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கடூர் தியாகராஜ நகர் பகுதியைச் சேர்ந்த கார்பெண்டர் விருப்பாச்சி என்பவனை கைது செய்து அவரிடமிருந்து 195 கிராம் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்