Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்டினா அருகே உள்ள எஸ் பிதரே கிராமத்தைச் சேர்ந்த குமார் 37 வயது இவர் கூளித்தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தார் அடிக்கடி அதே பகுதியைச் சேர்ந்த சந்திரப்பா என்பவர் தோட்டத்திற்கு சென்று தென்னந்தோப்பில் கீலே கிடக்கும் தேங்காயை எடுத்து வந்து அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றும் அதை சாப்பிட்டு குடித்தும் வந்த நிலையில் தினமும் இது போன்று செய்து வருவதால் இன்று காலை அதேபோல குமார் தோட்டத்திற்கு சென்று தேங்காய் எடுத்தார் அங்கிருந்த தோட்ட உரிமையாளர் சந்திப்பா அவரது மருமகன் மது இருவரும் குமாரை சரமாரியாக அடித்துள்ளனர் ஒருபக்கம் பட்டினியால் கிடந்த குமார் குடிபோதையிலும் இருந்த நிலையில் அடித்தவர் மயக்கம் போட்டு எழுந்திருக்க முடியாமல் போனர் பின்னர் அவரை உடனடியாக கடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டிச் செல்லப்பட்டது அங்கு இன்று மதியம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து சிகிச்சை பலனின்றி குமார் இறந்து விட்டார்
சக்கராயப்பட்டினம் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர் ஆனால் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்வதில் போலீசார் நாடகமாடினர் இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் கொல்லரஹட்டி பகுதியைச் சேர்ந்த குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் அங்கு வந்த மாவட்ட துணை சூப்பர்டணட் போலீஸ் விஜயகுமார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர் தேங்காய் எவ்வளவு விலை பெறும் தேங்காய் திருடிய குற்றத்திற்கு அடித்ததால் ஒரு உயிரை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
Also Read: சிக்கமகளூர் மாவட்டத்தில் பலத்த மழை பல இடங்களில் மண் சரிவு



