Additional judges to Madras High Court: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை: Appointment of 5 additional judges to Madras High Court. இந்திய தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பின்வரும் வழக்கறிஞர்களை சென்னை, அலகாபாத் மற்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.

இதன்படி, வழக்கறிஞர்களான லெஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதிகாரிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சையத் கொமார் ஹசன் ரிஸ்வி, மனீஷ்குமார் நிகம், அனிஷ் குமார் குப்தா, நந்த் பிரபா சுக்லா, ஷிடிஜி ஷைலேந்திரா, வினோத் திவாகர் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வழக்கறிஞர்கள் விஜய்குமார் அடகௌடா பாட்டில், ராஜேஷ் ராய் கலங்கலா ஆகியோர் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.