Blood Donate: சிக்கமகளூர் டவுன் ரோட்டரி கிளப் வலாகத்தில் பிரம்ம குமாரி ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் ஏற்பாடு செய்திருந்த பிரம்ம குமாரிகள் மறைந்த தலைமை நிர்வாகி பிரகாஷ் மணி தாதியின் 18 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரிய அளவில் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இதில் நகரைச் சேர்ந்த பல்வேறு துறை அரசுத்துறை ஆயுஸ் துறை மற்றும் பல்வேறு துறைகளும் கலந்து கொண்டனர் இதில் நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்தனர் தரிகெரெ மூடிகெரே பகுதியில் ரத்ததான முகாம் நடந்தது சிக்கமகளூரில் நடந்த இந்த ரத்ததான முகாமிற்கு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய எம்எல்ஏ தம்மையா ரத்தத்தை கொடுத்தால் மீண்டும் குறிப்பிட்ட சில நாட்களிலேயே அந்த ரத்தம் ஊறிவிடும் ஆகையால் ரத்தம் கொடுத்து மற்ற உயிர்களை காப்பாற்றுவதற்கு யாரும் தயங்க கூடாது எந்த ஒரு சமூக ஆர்வலர்கள் மற்றும் சுயம் சேவகர்கள் தானாக முன்வந்து ரத்தம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருக்கும்

காரணம் என்னவென்றால் எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக அவர்களுடைய ரத்தம் பயன்படுகிறது அதேபோல அமைதியை நிலைநாட்டும் பிரம்மகுமாரி அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட இந்த ரத்ததான முகாம் இந்தியா முழுவதும் நடந்து ஒரு லட்சம் யூனிட் வரை இரத்தம் சேகரித்து அதை மற்றவர்களுக்கு பயன்படுத்துவதற்கு இந்த முகாம் நடந்துள்ளது பெருமை அடிப்பதாகவும் போலீஸ் துறையிலும் தியானம் குறித்து மற்றும் அவர்களுடைய வேலை பாரத்தை பணியில் மனதை ஒறுமையாக வைத்துக் கொள்வதற்கு ராஜயோக பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் இதே வேளையில் மாவட்ட எஸ்பி விக்ரம்அமட்டே பிரம்ம குமாரி மூத்த சகோதரி பாக்கியலட்சுமி நகரசபை தலைவி சீலா மற்றும் பலர் இருந்தனர்



