Badrgri devasthana: பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16ஆம் தேதி ஆடி கிருத்திகை  கொடியேற்றத்துடன் தொடங்கியது

Badrgri devasthana adi kruthiga jatra
Image credit to original source

Badrgri devasthana: சிக்கமகளூர் மாவட்டம் தரிகெரெ தாலுகா எம்சி ஹல்லி கிராமத்தில் உள்ள பத்ரகிரி  ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 16ஆம் தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா நடக்கிறது

 இதற்கென கோவில் கமிட்டி சார்பாக இன்று கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது  அதற்கு முன்னதாக சுவாமிக்கு விசேஷ அலங்கார அபிஷேகங்கள் பூஜைகள் மற்றும் கணபதி யாகம் பல்வேறு யாகங்கள் நடத்தி கோவிலின் மடாதிபதியாகிய முருகேஷ் சுவாமிகள் மற்றும்

பிலகி மட்டா மடாதிபதியாகிய ரஜடேஸ்ரா சாமிகள் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார் ஆடி கிருதிகையை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி பரணி காவடி திருவிழா மற்றும் அன்று காலை விஸ்வரூப தரிசனம் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனை நடக்கின்றன அதேபோல 16ஆம் தேதி அன்று அடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 4 மணி முதல் விஸ்வரூப தரிசனம் விளா பூஜை காலை சந்திப்பூஜை மற்றும் பல்வேறு  பூஜைகள் நடந்து அன்று காலை முதல் காவடி செலுத்துதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது

 இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கோவில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர் இன்று கொடியேற்று விழா நிகழ்ச்சியில் எம் சி எல் ஹள்ளி கிராம பஞ்சாயத்து தலைவர் ராமேகவுடா பத்ரவதி முன்னாள் நகரசபை தலைவர் கருணாமூர்த்தி பத்ரகிரி சேவா குலுவை சேர்ந்த தலைவர் சோமு துணை தலைவர் மணி கணக்காளர் திருமூர்த்தி தனஞ்சேய் ரவி  கோவில் செயலாளர் சந்திரகோஸ் ஆகியோர் உடன் இருந்தனர் ஆறு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு இன்று முதல் களைகட்ட தொடங்கியுள்ளது பக்தர்கள் நிரந்தரமாக வந்து கொண்டிருக்கிறார்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்படுகிறது