Cylinder Price Hike: சமையல் சிலிண்டர் விலை உயர்வு: ராமதாஸ் கண்டனம்

சென்னை: சென்னையில் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை (Cylinder Price Hike) ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான பொருட்களில் சமையல் சிலிண்டரும் அடங்கும். இதனை ஏழை, நடுத்தர குடும்பம் மட்டுமின்றி அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில் திடீரென்று சமையல் சிலிண்டர் எரிவாயு விலை ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றத்தால் ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் ஓர் உருளையின் விலை ரூ.1118.50 ஆக உயர்ந்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் சமாளிக்க முடியாத விலை. இது அவர்களின் மாதச் செலவுகளை கடுமையாக பாதிக்கும். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.