Two Types Of Viruses: சென்னையில் நுழைந்த இரண்டு வகை வைரஸ்கள்

சென்னை: சென்னையில் சில நாட்களாக பரவி வரும் (Two Types Of Viruses) காய்ச்சல் இன்புளூயன்சா-ஏ வகை வைரஸ் தொற்று என்பது பொது சுகாதாரத்துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.வி. வைரஸ் தொற்று பரவலாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையிலான வைரஸ் தொற்றுகளும் பருவ காலத்தில் வழக்கமாக பரவும் பாதிப்புதான் என்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதே வேளையில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மேலும் குளிர்காலம் மற்றும் பருவமழைக்காலம் நிறைவடைந்த போதிலும் சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் முதியவர்களிடையும், குழந்தைகளிடையும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், எந்த மாதிரியான வைரஸ் பரவி வருகிறது என்பது பற்றிய ஆய்வை பொது சுகாதாரத்துறை முன்னெடுத்திருக்கிறது. மாதிரிகளை தோராயமாக பாதிக்கப்பட்டவர்களின் சளியை சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் தற்போது கொரோனா தொற்றோ அல்லது பன்றிக்காய்ச்சல் பாதிப்போ இல்லை என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இன்புளூயன்சா ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.