Edappadi Palaniswami Becomes General Secretary: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகும் எடப்பாடி பழனிசாமி? போட்டியின்றி தேர்வு செய்ய நிர்வாகிகள் தீவிரம்

சென்னை: அதிமுக பொதுக்குழு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஈரோடு (Edappadi Palaniswami Becomes General Secretary) கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 9ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 10ம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக 10ம் தேதி அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியான உடன் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்தலுக்கு பின்னர் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுச் செய்யப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது. இதனால் அதிமுகவில் நடைபெறும் அதிரடி அறிவிப்புகள் தொண்டர்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.