Cm Meeting: மதுரையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

மதுரை: தமிழக அரசின் நிர்வாக பணிகள் மற்றும் வளர்ச்சி (Cm Meeting) மற்றும் சட்டம், ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்து வரும் அரசு பணிகள், நடந்து முடிந்த திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நிலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரைக்கு வருகை புரிந்தார்.

அதன்படி நேற்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்டங்களில் தொழில் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்து ரையாடினார். மாலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்கள், 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.