Ayyankere Pond: அய்யன்கெரெ குளத்தை புதுபிக்க 5 கோடி எம்எல்ஏ தம்மைய்யா

Ayyankere pond: MLA pledges Rs 5 crore to renovate
Image credit to original source

Ayyankere Pond: சிக்கமகளூர் மாவட்டம்  கடூர் தாலுகா சக்கராயப்பட்டணாவில் உள்ள அய்யன்கெரெ குளம் மிகவும் பிரசித்தி பெற்ற குளமாகும் இந்த குளத்திற்கு உள்ளே ஐந்து மலைகள் அடங்கியுள்ளது 50000 ஏக்கருக்கும் மேல் இந்த பகுதியில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்கிறது மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகள் நல்ல மழை பெய்ததால் குளம் நிறைந்துள்ளது

இதற்கு அரசு துறை சார்பாக பாகினம் அர்பானம் செய்யப்பட்டது அதில் எம்எல்ஏ தம்மையா அவரது மனைவியுடன் கலந்து கொண்டார் மற்றும் மேல்சபை உறுப்பினர் போஜேகவுடாவும் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டனர்

பின்னர் எம்எல்ஏ தம்மையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இயற்கை கடவுளின் அனுகிரகத்தில் நல்ல மழை பெய்துள்ளது  இந்த குளம் நிறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஏரி குளங்களை வளர்ச்சி பணி செய்வதற்கு அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாகவும்  சுற்றுலா பயணிகளும் அதிகம் வரும் பட்சத்தில் புதிய தோற்றத்தை உருவாக்கப்படும் என தெரிவித்தார்

Ayyankere pond: MLA pledges Rs 5 crore to renovate
Image credit to original source

இதே வேளையில் எம்எல்சி போஜேகவுடா  கூறுகையில் ஒரு காலத்தில் இயற்கையை பாதுகாப்பதற்கும் இந்த குளத்தை பாதுகாப்பதற்கும் அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த வீட்டுக்கு ஒவ்வொருவரும் பராமரிப்பதற்கு வந்து செல்வார்கள் தற்பொழுது இதை நீர்ப்பாசன துறை எடுத்து நடத்துகிறது ஒரு சில இடங்களில் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் நீ பாசனத்துறையினர் சரி செய்து பராமரித்து சுற்றுலா பயணிகளும் அதிகம் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம பஞ்சாய்த்து தலைவர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்