Chikkamagaluru: போதைப்பொருள் விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எம்எல்ஏ தம்மையா

MLA Thammaiah: Action will be taken against those who sell drugs
Image credit to original source

Chikkamagaluru:சிக்கமகளூரில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் மற்றும் மகந்தா சிவயோகி பிறந்த நாள் விழா மனக்கவலை முத்தி தின விழாவை மாவட்ட பஞ்சாயத்து மாவட்ட செய்தி துறை பிரிவு மருத்துவத்துறை பள்ளி மற்றும் கல்வித் துறை சார்பாக கோட்டைப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து  இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கி தொகுதி எம்எல்ஏ தம்மையா பேசுகையில்

யார் ஒருவர் சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்றாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய மாவட்ட கலெக்டர் மற்றும் சூப்பர்டண்ட் போலீஸ் இடம் கூறியுள்ளோம் எனவும் தெரிவித்தார் இதே வேளையில் அங்கிருந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபானத்திற்கு அடிமையாகி விட்டால் அவர்களுடைய வாழ்க்கையும் எதிர்காலமும் வீணாகிவிடும் அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போதைக்கு அடிமையானவன் தாயை கொன்றுவிட்டு தீ வைத்துக் கொளுத்தி பக்கத்திலேயே படுத்து தூங்கி உள்ளான்

MLA Thammaiah: Action will be taken against those who sell drugs
Image credit to original source

இது போன்ற நிலைமைக்கு கொண்டு சென்று விட்டு விடும் ஆகையால்   நீங்கள் யாரும் போதை பொருளுக்கு அடிமையாகி விடக்கூடாது அதேபோல செல்போனை அத்தியாவசிய படும் பட்சத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் கெட்ட காரியத்திற்கு பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளக் கூடாது நீங்கள் எதிர்காலத்தை குறிக்கோளாக வைத்துக் கொண்டு நன்றாக படித்து பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்து வயதான காலத்தில் நீங்கள் வருமானம் சம்பாதித்து அவர்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார் இதே வேளையில் அங்கு வந்த மருத்துவர் சீனிவாஸ் என்பவர் மாணவ மாணவிகளுக்கு மது போதை    அடிமையாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் மனக்கவலை இருக்கும் பொழுது அதை சரி செய்து கொள்வதற்கு அரசு ஒரு டோல் ஃப்ரீ நம்பரை கொடுத்துள்ளது அதன் கலந்து கொண்டு நீங்கள் தினந்தோறும் பேசினால் உங்கள் மனக்கவலை தீர்ந்து விடும் தற்கொலை செய்து கொள்வது முக்கியம் கிடையாது நாம் அதை எதிர்த்து  போராட வேண்டியது முக்கியமானது என்றார்

ஐந்து கேரண்டி நலத்திட்ட தலைவர் சிவாநந்தசாமி மற்றும் வார்த்தா மற்றும் பிரச்சார பிரிவு அதிகாரி மஞ்சேகவுடா மற்றும் சிறப்பு விருந்தினராக ஓய்வு ஆசிரியர் திப்பேருத்ரப்பா கலந்து கொண்டனர் பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பின்பு பொம்மை ஆட்டம் விழிப்புணர்வு நாடகம் நடந்தது