ஜோ பைடனுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்த அதிபர் டிரம்ப் கோரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்த வேண்டும், நானும் சோதனைக்கு தயார் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எந்த கட்சி வெற்றிபெரும் என்று இந்த தேர்தலை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. தேர்தலுக்கு முன்னர் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் ஊடகத்தில் நேரடி விவாதம் நடத்துவது அமெரிக்க அரசியலில் கலாசாரம்.

கடந்த 2015 அமெரிக்க அதிபர் தேர்தலில் இவ்வாறு ஹிலாரி கிளிண்டன்-டிரம்ப் விவாதித்தனர். இவர்களை நெறியாளர் ஒருவர் வழிநடத்துவார். இதனை கோடிக் கணக்கான அமெரிக்க மக்கள் நேரலையில் கண்டு தங்கள் வாக்கு யாருக்கு என்பதை முடிவு செய்வார்கள்.

தற்போது இதே போல ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் டிரம்ப் – ஜோ பைடன் ஆகியோரது விவாத நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை ஒளிபரப்ப உள்ளது. விவாதத்துக்கு தயாராகிவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு 77 வயதான காரணத்தால் போதை மருந்து எடுத்துக் கொள்கிறார். விவாதத்துக்கு வரும் முன்னர் அல்லது விவாதம் முடிந்த பின்னர் அவரை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், அதே போல் மேலும் நானும் சோதனைக்கு தயார் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசியலும் டிரம்ப் வருகைக்கு பிறகு நம்மூர் தரை லோக்கல் அரசியல் போல் ஆகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here