தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

tn news : மீண்டும் ஊரடங்கு வருமா
மீண்டும் ஊரடங்கு வருமா

தமிழகத்தில் இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,மாநிலத்தில் இன்று புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,86,397ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,283 பேருக்கு கொரோனா உறுதியானது.

சிகிச்சைப் பெற்றவர்களில் 5,554 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது வரை 5,30,708 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இன்று 70 உயிரிழப்புகள் ஏற்பட்டதால் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,383ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.