எப்போது பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளி திறப்பு குறித்து கேட்டபோது, ” ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால், 26 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு சிலர் உயிரிழந்து உள்ளதாகவும் எனவே தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு பள்ளிக்கல்வி துறை, சுகாதார துறை, வருவாய்த்துறை இணைந்து ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தற்போதைக்கு அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.