100 மீட்டர் சிக்ஸர் – கூடுதலாக ரன் வழங்க கே.எல்.ராகுல் வேண்டுகோள்

100 மீட்டர் தூரத்துக்கு மேல் அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதலாக ரன் வழங்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 31வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 7 போட்டியில் 5ல் வெற்றி, 2 தோல்வி என பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இன்று வெற்றி பெற்று 2ஆவது இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் 7 போட்டியில் 6இல் தோற்று கடைசி இடத்தில் உள்ளது. இன்று தோற்றால் பிளேஆப் வாய்ப்பு மங்கிவிடும். எனவே கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது. இந்த சீசனில் பஞ்சாப் பெற்ற ஒரே வெற்றி பெங்களூருக்கு எதிராக தான். அதற்கு பதிலடி கொடுக்க பெங்களூரு காத்திருக்கிறது.

இந்நிலையில் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் காணொலி விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல், அதிரடியாக விளையாடும் பெங்களூரு வீரர்கள் கோலியையும், டிவில்லியர்ஸையும், ஐபிஎல் தொடரிலிருந்து நீக்க வேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டார்.

குறிப்பாக இன்று நடைபெறும் ஆட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் 100 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் தேவை என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.