சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

Special train, festival season

சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு அமலான பின்னர் விமான, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. இதன்பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அளவிலான பேருந்துகளும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கும் சூழலில் பயணிகளின் வசதிக்காக, பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம் பற்றிய அறிவிப்பினை தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ளது.

இதன்படி, சென்னை-நாகர்கோவில் இடையே வருகிற 23, 24, 29 ஆகிய நாட்களிலும், நவம்பர் 12, 13 ஆகிய நாட்களிலும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.