உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலத்தில் உயிருடன் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணிய குமார்(78), அவருடைய தம்பி சரவணன்(70) மற்றும் தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ, கீதா ஆகியோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கை கால்களை கட்டி அண்ணன் பாலசுப்பிரமணிய குமாரை தம்பி சரவணன் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்திருந்தார்.

இதனால் முதியவர் பாலசுப்ரமணியகுமார் உயிருடன் துடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஃப்ரீசர் பாக்ஸை எடுத்து செல்ல வந்தவர்கள் முதியவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டுவந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து முதியவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் தம்பி சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது திட்டமிட்டப்பட்ட கொலையா? அல்லது உயிருடன் இருந்தபோதே பாலசுப்ரமணிய குமாருக்கு இறப்பு சான்றிதழ் தரப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று முதியவர் பாலசுப்ரமணியகுமார் இனிய சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று பரிதாபமாக இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here