தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

tn news : மீண்டும் ஊரடங்கு வருமா
மீண்டும் ஊரடங்கு வருமா

தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,14,507-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,58,534 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,596 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,718-ஆக உயர்ந்துள்ளது.

  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1364 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 171415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 76,13,999 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 87,311 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,70,963 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,417 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் /2,43,513 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,205 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.