தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.1 லட்சம் கோடி கடன்

தமிழ்நாடு மின்வாரியம் ரூ.1 லட்சம் கோடி கடனில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 30,000 கோடியை கடனாக வழங்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருப்பதால் மின் கட்டணம் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் ரூ.1 லட்சம் கோடி கடனில் சிக்கியுள்ளது. இந்த கடன் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.30,000 கோடியை வழங்க அனுமதி அளித்துள்ளது.

ஆனால் 2வது தவணையை பெறுவதற்கு முன்பாக மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. எனவே தமிழகத்தில் 2 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக மின் துறை பொறியாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

மத்திய அரசு வழங்கும் ரூ. 30,000 கடன் தொகையில் என்எல்சி போன்ற மத்திய அரசின் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்க வேண்டிய தொகையை நேர் செய்யவே உதவும் என்று மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியிலும் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டி இருக்கும் அந்த அமைப்பு, இரு துணை மின் நிலையங்களை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த புள்ளிகள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here