Supreme Court judges to take oath : உச்சநீதிமன்ற 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு

புதுடெல்லி: 5 new judges to take oath as Supreme Court judges today. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கும் 5 பேருக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை கையெழுத்திட்டார். அதன் படி, உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பார்கள்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல்; பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல்; மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிவி சஞ்சய் குமார்; பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி, நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா; மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, நீதிபதி மனோஜ் மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் இவர்களின் பெயர்களை பரிந்துரைத்தது.

பிப்ரவரி 3 அன்று, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், நீதிபதிகள் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்தினால், விஷயங்கள் “சங்கடமானதாக” இருக்கும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

நீதிபதி கவுல், “நீங்கள் அவற்றை நிலுவையில் வைத்திருந்தால்.. மிக மிகக் கடினமான சில முடிவுகளை எடுக்க வைப்பீர்கள்” என்று மத்திய அரசிடம் கூறியிருந்தார்.

ஐந்து புதிய நீதிபதிகள் பதவியேற்பதன் மூலம், உச்ச நீதிமன்றத்தின் பலம் 27 இல் இருந்து 32 ஆக உயரும், மேலும் இரண்டு காலியிடங்கள் மட்டுமே இருக்கும். உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் ஆகும்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜனவரி 31ஆம் தேதி மேலும் இருவரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்த பரிந்துரைத்தது. இந்த இரண்டு பெயர்கள் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார்.

ஆகஸ்ட் 26, 2021க்குப் பிறகு, ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்றாக நியமிக்கப்பட்ட பிறகு, ஒரே தொகுப்பில் இவ்வளவு நீதிபதிகள் நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.