18 lakh robbery online: ஆன்லைனில் ஆசை காட்சி ரூ.18 லட்சம் கொள்ளை; இளைஞர் போலீசிடம் புகார்

திருவண்ணாமலை: The cybercrime police are investigating the scam of Rs 18 lakh from a youth through a mobile phone application near Thiruvannamalai. திருவண்ணாமலை அருகே செல்போன் செயலி மூலம் இளைஞரிடம் ரூ.18 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் ஆசைக்காட்டி பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுமார் 35 வயதுடைய வாலிபர் ரூ.18 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் உள்ள தேன் பழனி நகரை சேர்ந்தவர் குரு ராஜன் மகன் வசந்த். இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது செல்போன் வாட்ஸாப் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே தினமும் 7 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என விளம்பரம் வந்துள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்தவுடன் வசந்த் அதில் இடம்பெற்ற லிங்க் கை தொடர்பு கொண்டு உள்ளார். அதில் ஆன்லைன் வணிகம் மூலம் தேர்வு செய்து அதற்காக குறிப்பிட்ட பொருட்களுக்கு பணத்தை செலுத்தினால் அதற்கு ஈடாக கூடுதல் தொகை தங்களின் கணக்கில் வர வைக்கப்படும் என கூறியுள்ளனர். அதன்படி வசந்த் ஒவ்வொரு படியாக முன்னேறி 12 லட்சம் வரை படிப்படியாக பணம் செலுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போதும் அதைவிட கூடுதல் தொகை அவரது செல்போன் செயலி கணக்கில் இடம்பெறுவது போன்று குறுஞ்செய்தியும் வந்துள்ளது. வங்கி சேமிப்பு கணக்கில் பணத்தை செலுத்த வேண்டுமானால் அதற்கான வரி ரூபாய் 4 .50 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனை உண்மை என நம்பிய வசந்த் ரூபாய் 4.50 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி பணம் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. மீண்டும் அந்த செயலியில் வசந்த் முயற்சித்துள்ளார்.

சேவை வரி சிக்கலால் தொகையை செலுத்த இயலாமல் கிடப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே திரும்ப பெரும் வகையிலான தொகையை பெற மேலும் பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது தான் ஏமாற்றப்படுகிறோம் என்ற சந்தேகம் வசந்துக்கு வந்துள்ளது. ஆனால் எப்படியாவது இழந்த பணத்தை திரும்ப பெற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் மேற்கொண்டு 2 லட்சத்தையும் கடந்த மாதம் 31ஆம் தேதி செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலி முழுமையாக செயல் இழந்துள்ளது. எவ்வளவு முயன்றும் அதில் எவ்வித தகவல் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான் முழுமையாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்த் நேற்று திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.