Serial robbery at 4 ATM centers: ஏடிஎம் மையங்களில் கொள்ளை: உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் பணியிடமாற்றம்

திருவண்ணாமலை: In the Tiruvannamalai ATM robbery case, 6 constables, including the Special Assistant Inspector, have been transferred to the armed forces. திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 12ம் தேதி, திருவண்ணாமலை நகரின் மாரியம்மன் கோவில் 10வது தெருவில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நேற்றிரவு மர்ம நபர்கள் நுழைந்து இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தேனி மலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள அதே வங்கியின் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த 3 ஏடிஎம் மைங்களைப்போன்றே கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஏடிஎம் மையங்களிலும் மொத்தம் ரூ.80 லட்சம் வரை கொள்ளை நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்தி கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த கொள்ளையில் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர்.

அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமானதால் திருடர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவண்ணாமலை நகரக் காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடித்துச் சென்றதை அறிந்து ஏடிஎம் மையத்தின் ஷட்டரை பூட்டி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்த நிலையில் ஹரியானா மாநிலம் நூக் மாவட்டம் மேவாட் என்ற பகுதியை சார்ந்த கொள்ளை கும்பல்தான் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரிகளில் திருடப்பட்ட கார்களுடன் ஆந்திர மாநிலத்தை கடந்து சென்றுள்ளது. இதனால் கொள்ளையர்கள் வாகனம் குறித்து ஆந்திரா தெலங்கானா எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றபோது இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை எனக்கூறி, திருவண்ணாமலை நகர எஸ்.எஸ்.ஐ. மோகன், தலைமை காவலர் வரதராஜன், போளூர் எஸ்.எஸ்.ஐ. தட்சிணாமூர்த்தி, எஸ்.ஐ. அருள் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், கலசப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன் மற்றும் தலைமை காவலர் சுதாகர் ஆகியோரையும், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.