Leopard bites animals: நாமக்கல் அருகே விலங்குகளை கடித்து சிறுத்தை அட்டகாசம்

நாமககல்: The public is panicking as a leopard has not been caught for more than 10 days near Paramathivelur and is biting animals. பரமத்திவேலூர் அருகே 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தைப்புலி பிடிபடாமல் விலங்குகளைக் கடித்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் இருந்த நாய் ஒன்றை மர்ம மிருகம் கடித்துக் கொன்றது. இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று மிருகத்தின் கால்தடத்தை வைத்து அது சிறுத்தைப்புலி என்று ஊர்ஜிதம் செய்தனர்.

தொடர்ந்து சிறுத்தைப்புலி அப்பகுதியில் உள்ள மயில்கள், ஆடு, மாட்டுக்கன்றுக்குட்டி, வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட மிருகங்களை கடந்த 10- நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வருகிறது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள், சிறுத்தைப் புலியைப் பிடிக்க அதிகாரிகளைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

இதையொட்டி சிறுத்தைப் புலியைப் பிடிக்க, மாவட்ட வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இரண்டு இடங்களில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பகல் நேரத்திலும், இரவிலும் நவீன ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். முதுமலை, தேனி மற்றும் கோவை பகுதிகளில் இருந்து வந்துள்ள, வன விலங்குகளை பிடிப்பதில் அனுபவம் வாய்ந்த வன உயரடுக்கு படையினரும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தை பிடிபட்டால் அதற்கு மயக்க ஊசி போட 2 கால்நடை மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

செஞ்சுடையாம்பாளையம் அருகே உள்ள புலிகரடு மற்றும் அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள தனியார் கல் குவாரியின் அடர்ந்த பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள வனத்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு புளியம்பட்டி ரங்கநாதபுரம் தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் வளர்த்த கன்றுக் குட்டியை சிறுத்தைப்புலி அடித்துக் கொன்று சாப்பிட்டு விட்டு மீதி உடல் பாகங்களை போட்டுச் சென்றது. மேலும் கடந்த 12ம் தேதி மீண்டும் அதே பகுதிக்கு சென்ற சிறுத்தைப்புலி சண்முகம் என்பவரது தோட்டப்பகுதியில் உள்ள வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு சென்ற வனச்சரக அலுவலர் பெருமாசிறுத்தைப் புலி பிடிபடும் என்றும், அதுவரை பொதுமக்கள் கவனமாக நடமாட வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.ள் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 10 நாட்களுக்கு மேலாக வனத்துறையினரிடம் சிக்காமல் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விவசாயிகள் தோட்டப் பகுதிகளுக்கு சென்று பணிகளை செய்யவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இதுவரை சிறுத்தைப் புலி மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை, விரைவில் சிறுத்தைப் புலி பிடிபடும் என்றும், அதுவரை பொதுமக்கள் கவனமாக நடமாட வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.