TET Hall Ticket Release: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: Teacher Eligibility Test Hall Ticket Released. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரும், விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் புகைப்படம் ஒட்டாமலும், கையொப்பம் இன்மை ஆகிய காரணங்களுக்காக 21 தேர்வர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு,

ஆன்லைன் மூலம் மார்ச் 14 ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, பிப்ரவரி 3ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள் 2க்கான உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 பிப்ரவரி 3ம்தேதி முதல் 14ம்தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் தேர்விற்கும் மூன்று நாட்கள் முன்னதாக அவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு மையங்கள் 3 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்களை மாற்ற வேண்டுமென கூறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.