Actor Vindhyaa Twit To Evks: ராகுலுக்கு ஆண்மை இருக்கிறதா என்று இளங்கோவன் கேட்கிறார் போல: விந்தியா அதிரடி

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் (Actor Vindhyaa Twit To Evks) இடம் பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய வெற்றியை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வெற்றியை ஏற்றுக்கொள்வதற்கு ஆண்மை இருக்க வேண்டும் என்ற பதிலையும் அவர் முன்வைத்தார். இவரது பதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசுவதாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், நடிகையுமான விந்தியா தனது ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ஏலத்துல ஜெயிக்கிறதுக்கும் எலெஷன்ல ஜெயிக்கிறதுக்கும் வித்தியாசம் இல்லையா!! ஒரு வேளை இளங்கோவன் ஆண்மை இருக்கிறதா என்று ராகுல் காந்திய கேட்கிறார் போல.. ஏன்னா 3 ஸ்டேட்லயும் ஊஊஊஊ.. என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.