Home temple-astrology Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் மார்ச் 4, 2023

Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் மார்ச் 4, 2023

Today Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் மார்ச் 4, 2023

சென்னை: சுபகிருது ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி (Today Rasi Palan) சனிக்கிழமை 4.3.2023. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 1.39 மணி வரை துவாதசி. பின்னர் திரியோதசி. இரவு 8.22 மணி வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

மேஷம்: உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள் யார் என்பதைப் தெரிந்து கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். மனதில் ஏற்படும் குழப்பங்கள் நீங்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்: வாக்கு வன்மையாலும் திட்டமிடும் வல்லமையாலும் தொழிலை முன்னேற்றகரமாக நடத்துவீர்கள். கேளிக்கை நாட்டத்தில் அதிகம் ஈடுபடாதீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும்.

மிதுனம்: எந்தச் சிக்கலையும் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். தாய் தந்தையரின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். மேற்கு திசையில் நிலை வாசல் உள்ள வீட்டை வாங்குவீர்கள்.

கடகம்: மற்றவர்கள் செய்யும் தவறுக்காக நீங்கள் வீணாக டென்ஷன் அடைவீர்கள். வெளியூர்ப் பயணத்தில் நல்ல இடம் பார்த்து தங்குவீர்கள். வேண்டாத நண்பர்களை வீட்டிற்கு அழைக்காதீர்கள். அவசியத் தேவைக்காக நெருக்கமான நண்பரிடம் கடன் வாங்குவீர்கள்.

சிம்மம்: அன்பைக் குழைத்துப் பேசினால் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். எந்தக் காரியத்திலும் முன்னாடி நின்று செயல்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பீர்கள். அதனால் தாராளமாக செலவு செய்து மரியாதையை அதிகரித்துக் கொள்வீர்கள்.

கன்னி: வியாபாரத்தில் புத்திசாலித்தனத்தைப் புகுத்துவீர்கள். கமிஷன் பங்குப் பரிவர்த்தனை போன்ற தொழில்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளியிலிருந்து வரவேண்டிய பணத்தை தடங்கல் இல்லாமல் பெற்றுக் கொள்வீர்கள்.

துலாம்: வேலை முடியவில்லை என்பதற்காக சட்டென்று உணர்ச்சி வசப்படாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை சாதகமான நிலைக்கு கொண்டு வருவீர்கள். நில வியாபாரத்தில் கூட்டாக சேர்ந்து அதிகமான முதலீடு செய்வீர்கள்.

விருச்சிகம்: மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். காதலை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு: வாழ்க்கையில் வளைந்து கொடுத்துச் செல்வது தான் நல்லது என்று நினைப்பீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள் சந்திராஷ்டம நாள். இழப்புகள் வராமல் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

மகரம்: ஒதுங்கிப்போன உறவுகளை எல்லாம் ஒன்று சேர்க்க பாடுபடுவீர்கள். கூட்டுத் தொழிலில் சிறப்பான லாபத்தைப் பார்ப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்காக நகைகள் வாங்க திட்டம் போடுவீர்கள்.

கும்பம்: சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கோபம் வந்தால் உச்சத்தை எட்டுவீர்கள். பிறரின் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டால் அவமானத்தை சந்திப்பீர்கள். நேர்வழியில் காரியம் சாதிக்க நினைக்கும் நீங்கள் வேண்டாதவர்களின் முகஸ்துதிக்கு மயங்கி விடாதீர்கள்.

மீனம்: ஏற்றத்தாழ்வு பார்க்காத இரக்க குணம் கொண்ட நீங்கள் பிறருக்கு உதவி செய்வீர்கள். புகழுக்கு மயங்கி பணத்தை இழந்து விடாதீர்கள். நிதானமாக நடந்து கொண்டால் எந்தச் சூழ்ச்சி வலையிலும் சிக்க மாட்டீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.