ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைக்குமாறு தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை.!!!

கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், பொருளாதார நடவடிக்கைகளும் வேகம் பெறுகின்றன. செப்டம்பர் மாதத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த அரசாங்க தரவுகளின்படி, 5.74 கோடி இ-வே பில்கள் பதிவாகி உள்ளன.
மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பு பிப்ரவரியில் 5.71 கோடி இ-வே பில்கள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்யுமாறு நாளை நடக்கும் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி இழப்பை ஈடு செய்வது பற்றிய உத்தரவாதத்தை மத்திய அரசு மீறி இருப்பது பற்றி விவாதிக்க வேண்டும். இழப்பீடு பிரச்சனையில் வாக்கெடுப்பு நடத்த கவுன்சிலில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.