பண்டிகை காலத்தையொட்டி 200 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்- ரெயில்வே வாரியம்

Special train, festival season

பண்டிகை காலத்தையொட்டி, மேலும் 200 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தையொட்டி, அக்டோபர் 15-ந் தேதியில் இருந்து நவம்பர் 30-ந் தேதிவரை கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்

உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி, கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்த பின் எத்தனை சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று முடிவு செய்வோம். தற்போதைக்கு 200 சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று மதிப்பிட்டுள்ளோம். இது, வெறும் மதிப்பீடுதான். இந்த எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here