டிரம்ப் தம்பதிக்கு கொரோனா- சரிவை சந்திக்கும் அமெரிக்க பங்குச்சந்தை!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்றும் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி வெளிவந்த பிறகு அமெரிக்க பங்குச்சந்தைகள் அனைத்தும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன .மேலும் திங்கள்கிழமை தொடங்க இருக்கும் இந்திய பங்குசந்தைகளான மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீடு எண் நிஃப்டி பங்குகள் சரிய வாய்ப்புள்ளதாக பங்குத்தரகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.