4,000 கோடி ரூபாய் மதிப்பில் ‘அடல் சுரங்கப் பாதை’ – திறந்து வைத்தார் மோடி

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் 4,000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ மற்றும் பயண நேரத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ‘அடல் சுரங்கப்பாதையை’ இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டங் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று திறந்து வைத்தார்.

அடல் சுரங்கப் பாதை, 10, ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையாகும். மொத்த நீளம் 9.02 கி.மீ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.