3 போட்டிகளில் தொடர் தோல்வி- அணுகுமுறையில் மற்றம் கொண்டுவர நினைக்கும் டோனி!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தடுமாறி வருகிறது. 4 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்விகள் என தத்தளித்து வருகிறது. சென்னை அணியில் துவக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

நேற்று ஐதாராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இது தொடர்பாக டோனி கூறுகையில், என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. எப்படியாயினும் பந்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.

நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான். பேட்ஸ்மென்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும், 16-வது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம். ஒட்டுமொத்தமாக இன்னும் ஆட்டத்திறன் மேம்பட வேண்டும். மேலும் அணுகுமுறையில் மற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here