தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நாளை உடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு

திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி

புறநகர்ப் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும்

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது

கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்

அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு

உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி

உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி

சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.