மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் வழங்க சாத்தியம் உள்ளதா?; உயர்நீதிமன்றம்

மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் வழங்க சாத்தியம் உள்ளதா? என பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல், தனி மனித விலகல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் வழங்க சாத்தியம் உள்ளதா என்று பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் அரசாணையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிடக் கோரி திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கு அக். 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here