திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்- துரைமுருகன்

திமுகவில் மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைக் கழகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முக ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனை அரசியலில் தீவிரமாக களமிறக்கி உள்ளார். கம்பனுக்கு மருத்துவ அணி துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுளளது. இதேபோல் ராஜகண்ணப்பனுக்கு தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ”தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here