தமிழகத்தை தொடர்ந்து ஒடிசாவிலும் சோகம்..!

நீட் தேர்வுக்கு பயந்து ஒடிசாவில் 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் ஏற்கனவே மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

இந்த வடு ஆறுவதற்கு முன்பு தற்போது ஒடிசாவில் 19 வயது மாணவி நீட்தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபடா நகரத்தைச் சேர்ந்த மாணவி உபாஷனா சாகு ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார்..

இந்நிலையில் நேற்று நீட்தேர்வு நடக்கவிருந்த நிலையில் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது தொடர்பாக அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் நீ தேர்விற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். தற்போது நான்கு மாணவர்கள் உயிரிழந்தது மேலும் நீட் தேர்வு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here