‘ஆன்மிகப் பெரியாரின் ஆசி மலரட்டும்’ – மதுரையில் பரபரப்பு

ஆன்மிகப் பெரியாரின் ஆசி மலரட்டும் என நடிகர் ரஜினி ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று நாளுக்கு நாள் ஒரு தகவலை வெளியிட்டு வருகிறார். அவரது ரசிகர்களும் நடிகர் ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும் மதுரையில் அவரது ரசிகர்கள் வினோத போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர் அதில் ஆன்மிகப் பெரியாரின் ஆசி மலரட்டும் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.