என்னோடு கேசினோவுக்கு குமாரசாமி வந்தார்: எம்.எல்.ஏ ஜமீர் அகமது

பெங்களூர்: கேசினோவிற்கு சென்றது உண்மை எனவும், என்னுடன் குமாரசாமியும் வந்தார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைபொருள் மாஃபியாவுடன் திரைப்பட நடிகைகள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் மஜத சட்டமன்ற உறுப்பினர் ஜமீர் அகமது பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் கொழும்புக்குச் சென்றேன் என்பது உண்மைதான். என்னுடன் முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி வந்தார். அப்போது கேசினோவுக்குச் சென்றோம். ஆனால் போதைபொருள் கடத்தலில் ஈடுபடவில்லை. வேண்டும் என்றே எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அப்படி தொடர் இருப்பதை நிருப்பித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.