தமிழகத்தில் இன்று5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பால் 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,307ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 47,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,227 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4லட்சத்து 41ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,517 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86,486 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும், இதுவரை 56,19,012 பேருக்கு கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.