திரையரங்குகளில் ரிலீஸாகும் க/பெ.ரணசிங்கம்!!!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் ஒடிடியில் வெளியான க/பெ.ரணசிங்கம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் தற்போது 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ‘க/பெ.ரணசிங்கம்’ பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ”இதைச் சொல்ல எவ்வளவு நாள்கள் காத்திருந்தோம். எங்கள் அனைவருக்குமே இது ஒரு உணர்ச்சிகரமான தருணம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களுக்குத் திரையரங்க அனுபவத்தைத் தர நாங்கள் வந்திருக்கிறோம். ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படத்தை அக்டோபர் 16 முதல் திரையரங்குகளில் காணுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here