சொகுசு கார் வாங்கிய நஸ்ரியா- பகத் பாசில்!

நஸ்ரியா- பகத் பாசில் ஜோடி விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவர் மலையாளம் தவிர தமிழிலும் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகை நஸ்ரியாவுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் பிரேக் எடுத்த நஸ்ரியா மீண்டும் கடந்த 2018ஆம் ஆண்டு ’கூடே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் இந்த தம்பதி தற்போது விலை உயர்ந்த போர்ஷ் என்ற சொகுசு காரை வாங்கியுள்ளனர். காருடன் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகத் பாசில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அதன் ஷோரூம் விலை ரூ. 1.90 கோடியாம். ஒரு வினாடியிலேயே 100 கிலோ மீட்டர் வேக பிக்கப்பை அடைந்துவிடுமாம் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.