இந்தியாவின் ‛டாப்-100′ பணக்காரர்களின் பட்டியல்: முதல் இடத்தில் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‛டாப்-100′ பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார்.

முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தை 25 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய அதானி குழுமத்தின் குழுமத்தின் கெளதம் அதானி பிடித்துள்ளார்.மூன்றாவது இடத்தில் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடாரும், 4ஆவது இடத்தில் அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானியும், 5ஆவது இடத்தில் அசோக் லேலாண்ட்டின் இந்துஜா சகோதரர்கள் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து 6 முதல் 10 இடங்கள் முறையே, சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா, பல்லோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், கோத்ரெஜ் குடும்பம், லட்சுமி மிட்டல் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.